#BREAKING: திருத்தணிகாசலத்தை போலீஸ் காவலில் வைக்க அனுமதி.!

திருத்தணிகாசலத்தை 6 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.
உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் நோயை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்க பல நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தை சார்ந்த சித்தவைத்தியர் திருத்தணிகாசலம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் கூறி வந்தார். இவர் சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்பி வருவதாகவும், அவர் போலி மருத்துவர் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை இயக்குநர், காவல்துறையிடம் புகார் கொடுத்தது.
இந்த புகார் அடைப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தணிகாசலத்தை கைது செய்தனர். இந்நிலையில், சித்தவைத்தியர் திருத்தணிகாசலத்தை 6 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025