ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதை ஒட்டி முதலமைச்சர் பழனிசாமி கடந்த நவம்பா் மாதம் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தாா்.அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்றும் இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.அதில், 1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை,2 அடி துண்டு கரும்பு,20 கிராம் முந்திரி,20 கிராம் உலர் திராட்சை,5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது.பின்னர் ரூ.1000 பொங்கல் பரிசு தர ரூ.2,363 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவண்ணாமலையைச் சேர்ந்த அலமேலு என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.அவரது வழக்கில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வகையில் பொங்கல் பரிசு அமைந்துவிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார் .இந்த வழக்கினை உயர்நீதிமன்றம் மதியம் விசாரிப்பதாக அறிவித்துள்ளது.
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…