சென்னை ஆர்.ஏ.புரத்தில் பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வசித்து வரும் நிலையில்,அப்பகுதியில் உள்ள வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி மாநகராட்சி நிர்வாகத்தில் இடிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால்,இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில்,தன்னுடைய வீடு இடிக்கப்படுவதை கண்டித்து அப்பகுதியில் வசித்து வந்த முதியவர் ஒருவர் நேற்று தீக்குளித்தார்.பின்னர்,உடனடியாக,தீ அணைக்கப்பட்டு முதியவர் மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து,தற்காலிகமாக வீடுகளை இடிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில்,சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில்,ஆக்கிரமிப்பு விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதால் நாளை விசாரணை நடைபெறுகிறது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…