சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்று உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் எஸ்.பி ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்பட்டது. அந்த பெண் எஸ்.பி, காவல்துறை டி.ஜி.பி, உள்துறைச் செயலாளர் ஆகியோரைச் சந்தித்து ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் அளித்தார். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, 6 பேர் கொண்ட குழு ஒன்றைத் தமிழக அரசு அமைத்திருந்தது. இதைத்தொடர்ந்து, பெண் ஐ.பி.ஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகாரின் பேரில் ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இன்று ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம். அதன்படி, ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை விசாரித்து இன்று பிற்பகல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணை நடத்தினார்.
அப்போது, பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என்றும் விசாரணையின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சிபிசிஐடி அறிக்கை தர வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் பற்றி காவல்துறை ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆவண தாக்கல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…