தமிழகத்தில் மூன்று ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ள நிலையில், ஒரு இடத்தில் செப்டம்பர் 13-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று ராஜ்யசபா (மாநிலங்களவை) இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக தேர்தல் மாநிலங்களவை தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.
தமிழகத்தில் காலியாக இருக்கக்கூடிய இடங்களில் ராஜ்யசபா தேர்தலை உடனடியாக தனித்தனியாக நடத்த வேண்டும் என்று திமுக மக்களவை குழு தலைவர் டிஆர் பாலு, மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வில்சன், ஆர்எஸ் பாரதி உள்ளிட்டோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையரை நேரில் சென்று சந்தித்து வலியுறுத்தி இருந்தனர்.
இதன் அடிப்படையில், தற்போது தமிழகத்தில் காலியாக இருக்கும் ஒரு இடத்துக்கான ராஜ்யசபா தேர்தல் செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலினை செப்டம்பர் 1ம் தேதியும், வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் செப்டம்பர் 3ம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மூன்று இடங்கள் கலியாகவுள்ள நிலையில், தற்போது ஒரு இடத்துக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. அதிமுகவின் முகமது ஜானின் மறைவை தொடர்ந்து அந்த இடத்துக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 மார்ச் 23-ஆம் தேதி அதிமுக மாநிலங்களவை எம்பி முகமது ஜான் காலமானார்.
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…