சி.ஏ.ஏ.சட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்டப் பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கொண்டு வந்தது.இதன்மூலம்,கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தவர், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே அந்த திருத்தம்.
ஆனால்,இந்த மசோதாவை காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.
இந்நிலையில்,இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப் பேரவையில் இன்று அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும்,இந்த தனித் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…