கடந்த 11 நாட்கள் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா செல்லும் காரின் முகப்பில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது.
பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, சசிகலா சற்றுமுன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த ஜனவரி 20-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா 11 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கொரோனா அறிகுறிகள் குறைந்து, உடல் நிலை இயல்பாக இருப்பதால் சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனை முன்பு ஏராளமான அமமுகவினர் குவிந்துள்ளனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலாவுக்கு சொந்தமான காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து சசிகலா செல்லும் காரின் முகப்பில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இது குழப்பத்தை ஏற்படுத்தும் நிலையாக கருதப்படுகிறது.
இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை. கட்சியில் இல்லாத ஒருவர் அதிமுக கொடியை பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது. எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களின் படங்களை பயன்படுத்தவும் சசிகலாவுக்கு தார்மீக உரிமை இல்லை என தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா பெங்களுரில் உள்ள பண்ணை வீட்டில் இரண்டு, மூன்று தினங்கள் ஓய்வு எடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…