பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத்தை தாக்கிய விவகாரத்தில், இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) பெண் காவலர் குல்விந்தர் கவுர், மீண்டும் பணியில் இணைக்கப்பட்டு, பெங்களூருவுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று ஒரு தகவல் வெளியாகியது. கடந்த ஜூன் 7ஆம் தேதி, சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனையின் போது, கங்கனா ரனாவத் மற்றும் சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முத்தியதும், குல்விந்தர் கவுர் கங்கனா ரணாவத்தை […]
Bangalore Heat Wave : பெங்களூரில் இந்த ஆண்டு அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் பல மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில், பெங்களூரில் மிகவும் கடுமையாக வெயிலின் தாக்கம் இருக்கிறது. குறிப்பாக, இன்று பெங்களூரில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இந்த ஆண்டு அதிகபட்சம் மற்றும் கடந்த 8 ஆண்டுகளில் இரண்டாவது அதிக எண்ணிக்கையாக பதிவாகி இருக்கிறது. இதற்கு முன்னதாக பெங்களூரில் கடந்த 2016 […]
Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் […]
Bangalore: கர்நாடகாவில் கோயில் திருவிழாவில் மிகப்பெரிய தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பெங்களூரு அருகே ஹூஸ்கூர் கிராமத்தில் உள்ள மதுரம்மா தேவி கோயில் தேர் திருவிழாவில் 150 அடி உயர தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானது. பக்தர்கள் வடம்பிடித்து இழுத்துக் கொண்டிருந்தபோது ஒரு பக்கமாக சாய்வதை பார்த்து பக்தர்கள் உடனடியாக ஓடியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து தொடர்பான காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bomb Threat: கர்நாடக அரசுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பெங்களூருவின் முக்கிய இடங்களில் உள்ள உணவகங்கள், கோயில்கள், பேருந்துகள் போன்றவற்றில் வெடிகுண்டு வெடிக்கும் அந்த மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. READ MORE – உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா..! பாஜகவில் இணையவுள்ளதாக அறிவிப்பு மேலும் அதில், குண்டுவெடிப்பைத் தவிர்க்க ரூ.20 கோடி வேண்டும் என்று கூறப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. முதலமைச்சர், உள்துறை அமைச்சர், காவல்துறை தலைவர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது, கர்நாடக போலீஸார் […]
Rameshwaram Cafe – கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரபலமாக செயல்பட்டு வரும் உணவகங்களில் ஒன்றான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் 1ஆம் தேதி வெடிகுண்டு வெடித்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். சிசிடிவி காட்சிகள் மூலம், 29-30 வயது கொண்ட ஒரு நபர் ஒரு பையை உணவகத்தில் வைத்துவிட்டு பின்னர் அங்கிருந்து சென்றது தெரியவந்தது. Read More – நெருங்கும் தேர்தல்.! மீண்டும் மீண்டும் தமிழகத்தில் பிரதமர் மோடி… அந்த நபர் அங்கிருந்து சென்ற சில நிமிடங்களில் […]
பெங்களூரு: கேஆர் புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீமியா லேஅவுட்டில் நேற்று காலை 40 வயது (தாய்) பெண் தனது இளம் (வயது 17) மகனால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்த பெண் கோலார் மாவட்டம் முல்பாகல் பகுதியைச் சேர்ந்த நேத்ரா என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டது. தகராறு காரணமாக டிப்ளமோ படித்துவரும் இளைஞன், அவரது தாய் நேத்ராவை இரும்பு கம்பி கொண்டு தலையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதன்பின், காவல் நிலையத்திற்கு சென்று […]
பெங்களூருவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றவுள்ளது. கர்நாடக மாநில தலைவர் விஜயேந்திரா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் கலந்து கொள்ளவதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் ராஜீவ் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்நிலையில், பெங்களூரு அரண்மனை மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது. மத்திய அமைச்சர்கள் […]
அரசு சொகுசு பேருந்து ஒன்று பெங்களூருவில் இருந்து வருகையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து அரசு பேருந்து வருகையில்,திருச்சி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வளைவில் திரும்புகையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் நல்லவேளையாக உயிர்ச்சேதம் எதுவும் இதுவரை பதிவாகவில்லை. பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் ஒரு தொலைதூர கல்வி நிலையத்தில் போலியாக முதுகலை, பிஎச்டி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. போலி சான்றிதழ் , போலி பட்டம் என்று உலா வந்து, தற்போது புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் பெயர்களில் முதுகலை பட்டம், பி. எச்டி பட்டம் வரையில் வந்துவிட்டது. அதுவும் தொலைதூர கல்வி வழங்கும் ஒரு கல்வி நிலையத்தில் தான் இந்த மோசடிகள் அரங்கேறியுள்ளன. அங்கு அண்மையில் அரசு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 1000 போலி சான்றிதழ்கள், முத்திரைகள் ஆகியவை கண்டறியப்பட்டன. […]
போதைப்பொருட்களுக்கு எதிரான சோதனையின் போது பெங்களூருவில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் பல்வேறு விதமான போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தியாவில் போதைப்பொருள் கலாச்சாரம் சற்று அதிகரித்து வருவதை காண முடிகிறது. அதற்கு சாட்சியாக முன்பில்லாத அளவுக்கு பல்வேறு இடங்களில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி போதைப்பொருள்களை கைப்பற்றி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தும் வருகின்றனர். இந்த போதை வஸ்துக்களை பயன்படுத்துவது பெரும்பாலும் படிக்கும் மாணவர்களும், படித்த இளைஞர்களும் என்பது வேதனைக்குரிய செய்தியாகும். அப்படித்தான் […]
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பெங்களூருவின் சில பகுதிகளில் பெய்த கனமழையால், மகாதேவபுராவில் உள்ள ஹூடி வட்டம் அருகே,கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். “செவ்வாய்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் சம்பவம் நடந்தாலும், மற்ற தொழிலாளர்கள் அந்த இடத்திற்குச் சென்றபோதுதான் தெரிய வந்தது” என்று போலீஸார் தெரிவித்தனர். “கனமழை பெய்ததால், அவர்கள் தரை தளத்தில் தூங்கினர்,” அப்பொழுதுதான் இந்த விபத்து நடந்ததுள்ளது என்று போலீசார் மேலும் தெரிவித்தனர்.
பெங்களூரில் கன மழைக்கு மத்தியில் வழுக்கும் சாலையில் சறுக்கிய வோல்வோ பேருந்து. கனமழைக்கு மத்தியில் பெங்களூரு-மைசூரு விரைவு சாலையில் வால்வோ பேருந்து கட்டுப்பாடின்றி சறுக்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ஒரு டிரக் விபத்துக்குள்ளாகி கிடக்கும் நிலையில், பேருந்து கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாக சறுக்குவதைக் இந்த வீடியோவில் காணலாம். கர்நாடகாவில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்த கனமழையால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். When u travel in B’lore????Mysore new highway Road make […]
கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால், அவுட்டர் ரிங் ரோடு (ஓஆர்ஆர்) பகுதியில் உள்ள ஐடி நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்களுக்கு ₹225 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அவுட்டர் ரிங் ரோடு கம்பெனிகள் சங்கம் (ஓஆர்ஆர்சிஏ) தெரிவித்துள்ளது. ஓஆர்ஆர் இல் உள்ள IT நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் $22 பில்லியன் வருவாய் ஈட்டுகின்றன, இது பெங்களூரின் மொத்த IT வருவாயில் 32% ஆகும். ஓஆர்ஆர் இல் உள்ள மோசமான உள்கட்டமைப்பு, இங்கு அமைந்துள்ள […]
பெங்களுருவில் பேமெண்ட் கேட்வே நிறுவனமான ரேஸர்பேயில் இருந்து ரூ.7.38 கோடி பணத்தை திருடிய ஹேக்கர்கள். பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பேமெண்ட் சேவை நிறுவனமான ரேஸர்பே-வில் (Razorpay) ஹேக்கர்கள் தங்களது கைவரிசையைக் காட்டி சுமார் 7.3 கோடி ரூபாயை திருடியுள்ளனர். ஹேக்கர்கள் மற்றும் மோசடி வாடிக்கையாளர்கள் சுமார் 831 தோல்வியுற்ற பரிவர்த்தனைகளை அங்கீகரிப்பதற்காக Razorpay மென்பொருளின் அங்கீகார செயல்முறையையே (authorisation process) திருடி சுமார் 7.38 கோடி ரூபாயை திருடியுள்ளனர் என்று பேமெண்ட் கேட்வே நிறுவனம் அளித்த […]
பெங்களூருவில் இருந்து கோவை வருகை: மண் வளப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 27 தன்னார்வலர்கள் பெங்களூருவில் இருந்து சுமார் 420 கி.மீ சைக்கிளில் பயணித்து இன்று (ஏப்ரல் 15) கோவை வந்தடைந்தனர். ’பெடல் புஸ்ஸர்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த குழுவில் முன்னாள் ராணுவ வீரர்கள், ஐ.டி நிறுவன ஊழியர்கள், மருத்துவ துறையைச் சேர்ந்தவர்கள் என பல தரப்பினர் இடம்பெற்றுள்ளனர். சத்குரு தொடங்கியுள்ள மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாக இந்த விழிப்புணர்வு பேரணியை அவர்கள் மேற்கொண்டனர். […]
கர்நாடகா மாநிலத்தில் முன்னதாக அரசுப்பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து,ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர்.இதனைத் தொடர்ந்து, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம்’ என இந்து மாணவ, மாணவிகள் எதிர் போராட்டம் நடத்தினர்.அதன்பின்னர்,ஹிஜாப்புக்கு ஆதரவாக மற்றும் எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன. இதனையடுத்து,முஸ்லிம் மாணவிகள் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கு விசாரணைக்கு விசாரணை முடியும் வரை ஹிஜாப் […]
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்தபோது சொகுசு வசதிகளைப் பெறச் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா,இளவரசி ஆகியோர் மற்றும் லஞ்சம் பெற்ற சிறை அதிகாரிகள் உட்பட 6 பேருக்கு எதிராக கர்நாடகா ஊழல் தடுப்பு படை காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா 4 ஆண்டுகள் தண்டனைக்காலத்திற்கு பிறகு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை ஆகி வெளியே வந்தார். இதனையடுத்து, சிறையில் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய பெங்களூரு விரைந்தது தனிப்படை. அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய பெங்களூரு விரைந்தது தனிப்படை காவல்துறையினர். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ராஜேந்திர பாலாஜி பெங்களுருவில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தனிப்படை விரைந்துள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய ராஜேந்திர பாலாஜியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி […]
நீலகிரி:ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் அவர்கள் உயர் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குன்னூர் அருகே நேற்று நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில்,அதில் பயணித்த 14 பேரில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.மேலும்,விபத்தில் சிக்கி தற்போது உயிரோடு உள்ள ஒரே ராணுவ அதிகாரி கேப்டன் வருண் சிங் 80 சதவிகித காயங்களுடன் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் […]