#Breaking:மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முறைகேடு;சிபிஐ விசாரணை – உயர்நீதிமன்றம் கேள்வி!

2020-2021 ஆம் கல்வியாண்டில் 113 காலியிடங்களில் 90 இடங்களுக்கு தனியார் கல்லூரிகளில் கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கையை நடத்துவதாக இரண்டு மருத்துவ மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்நிலையில்,இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தனியார் கல்லூரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு தொடர்பான வழக்கை ஏன் சிபிஐ-க்கு மாற்றக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிள்ளது.
மேலும்,அரசு ஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடந்த நிலையில்,நிர்வாக ஒதுக்கீட்டுக்கு கலந்தாய்வு நடத்தாதது ஏன் என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில்,இவ்வழக்கு தொடர்பான விசாரணையை ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025