#Breaking : நடிகர் சரத்குமாருக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு…!

Default Image

சரத்குமாருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீடு செய்வதற்காக, சென்னை சிறப்பு நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. 

இது என்ன மாயம் பட தயாரிப்புக்காக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ. 1.5 கோடி மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் வாங்கியது. கடனை திருப்பியளிப்பதில் மேஜிக் பிரேம் நிறுவனம் செக் மோசடி செய்துள்ளது.  அந்நிறுவனத்தின் பங்குதாரர்களாக சரத்குமார்,ராதிகா சரத்குமார் உள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் வங்கிக்கணக்கில் பணம் இல்லாததால் கடனுக்காக தந்த 7 காசோலைகள் திரும்பி வந்தன. மோசடி வழக்கில் சரத்குமாருக்கு 7 வழக்குகளில் தலா ஓராண்டு சிறை  தண்டனை விதித்து சென்னை எம்பி எம்எல்ஏ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், சரத்குமார் இது தொடர்பாக மேல்முறையீடு செய்வதற்காக, சென்னை சிறப்பு நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்