Tamilnadu government[File iamge]
காவிரி நீர் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. அதாவது காவிரி நீர் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி அவரச வழக்காக விசாரிக்க கோரி முறையிட்டுள்ளார். கர்நாடக அரசு காவிரியில் இருந்து 24,000 கன அடி தண்ணீரை திறக்க வேண்டும் என்று தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது.
தண்ணீர் இல்லாமல் பயிர் கருகி வருவதால் காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் திறக்கக்கோரி தமிழ்நாடு அரசு இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த சமயத்தில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது. பட்டியலில் இணைக்கப்படாமல் முறையீட்டை எவ்வாறு ஏற்பது என உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். முறையிட்டு பட்டியலில் இணைக்க பதிவாளரிடம் கோரிக்கை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூன், ஜூலை வரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய 28.8 டிஎம்சி திறந்துவிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…
கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…