தூத்துக்குடி இளைஞர் செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த செல்வன் என்ற இளைஞரை நிலத்தகராறு காரணமாக கடந்த 17-ஆம் தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடத்தி கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகர் திருமணவேல், முத்துகிருஷ்ணன் ஆகியோர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று காலை சரணடைந்துள்ளனர் என்று தூத்துக்குடி எஸ்.பி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இளைஞர் செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, கொலை செய்யப்பட்ட இளைஞர் செல்வனின் உடலை வாங்க மறுத்து நேற்று சொந்த ஊரில் போராட்டம் நடைபெற்றது. இந்த கொலையில் அதிமுக பிரமுகர் திருமணவேல், முத்துகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…
சென்னை : லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…