தூத்துக்குடி இளைஞர் செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த செல்வன் என்ற இளைஞரை நிலத்தகராறு காரணமாக கடந்த 17-ஆம் தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடத்தி கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகர் திருமணவேல், முத்துகிருஷ்ணன் ஆகியோர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று காலை சரணடைந்துள்ளனர் என்று […]