#Breaking: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு- 6 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக பத்திரப்பதிவுத் துறையில் பணியாற்றும் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதுபோல குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் சித்தாண்டி, பூபதி ஆகிய இரு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கைதான ஆயுதப்படை காவலர்கள் சித்தாண்டி, பூபதியை பணியிடம் நீக்கம் செய்து சென்னை காவலர் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வை முறைகேடாக எழுதி பணியில் பத்திரப்பதிவுத் துறையில் பணியாற்றும் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி,பத்திரப்பதிவு துறையில் பணியாற்றும் ஜெயராணி, வேல்முருகன், சுதா, ஞானசம்பந்தம், வடிவு, ஆனந்தன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து பத்திரப்பதிவுத்துறை ஐஜி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.