செய்தியாளர்களிம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், 975 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள புரெவி இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை காலை புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் வருகின்ற 2-ஆம் தேதி மாலை இலங்கையைக் கடந்து குமாரி கடற்கரைக்கு நகரக் கூடும்.
இதனால், நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய அதி கனமழையும், 2-ஆம் தேதி தென்காசி இராமநாதபுரம் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு இடைவெளி இடியுடன் கூடிய அதி கனமழையும், புதுக்கோட்டை சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் இந்த பகுதிகளில் சூறாவளி காற்று 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.
வருகின்ற 3-ஆம் தேதி தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழையும், சிவகங்கை, ராமநாதபுரம் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என புவியரசன் தெரிவித்தார். மேலும், மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு தெற்கு வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
டெல்லி : இந்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு 2025 ஜூலை 1 (இன்று) முதல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…