விருதுநகர்:பட்டியலின இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நான்கு சிறார்களுக்கு ஜாமீன்.
விருதுநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரிஹரன், ஜுனைத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து,சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்தனர்.
அதன்பின்னர்,இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஹரிஹரன்,ஜூனைத், மாடசாமி, பிரவீன் மற்றும் 4 பள்ளி மாணவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர்.இதனையடுத்து,பள்ளி மாணவர்கள் தவிர மற்ற 4 பேருக்கும் வரும் 18 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விடுக்கப்பட்டது.எனினும்,கைதான எட்டு பேரில் நான்கு பேர் பள்ளி மாணவர்கள் என்பதால் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில்,விருதுநகரில் பட்டியலின இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நான்கு சிறார்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.சிறார் நீதி குழும நீதிபதி மருதுபாண்டியன் அவர்கள் நான்கு சிறார்களுக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…