ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகியுள்ள, ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி 27 ஆண்டுகளாக எனது மகன் ரவிசந்திரன் சிறையில் இருக்கிறார். இந்த வழக்கில், 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதனடிப்படையில், 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தமிழக அரசின் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேறியுள்ளது.
இந்த நிலையில், ரவிச்சந்திரனுக்கு 3 மாத சாதாரண விடுப்பு வழங்க கோரி மனு அளித்துள்ளேன். அவருக்கு சாதாரண விடுப்பு வழங்க பரிசீலனை செய்ய இயலாது என தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, ரவிச்சந்திரனுக்கு 2 மாதகால சாதாரண விடுப்பு வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் மற்றொருவருக்கு பரோல் வழங்கப்பட்ட நிலையில், ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், தமிழக அரசு தரப்பில் இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…