ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாமல் கூட்டப்பட்ட பொதுக்குழு சட்டவிரோதமானது என வைத்திலிங்கம் சார்பில் வாதம்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது 3ம் நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களையும், பொதுச்செயலாளர் தேர்தலையும் எதிர்த்த ஓ.பி.எஸ்., மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
ஏற்கனவே, ஓபிஎஸ் தரப்பு வாதம் முடிந்த நிலையில், இன்று மூன்றாம் நாள் விசாரணையில் வைத்திலிங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் வாதம் முன் வைத்து வருகிறார். அப்போது கூறுகையில், பொதுக்குழுவில் கட்சி விதிகளை பின்பற்றி தீர்மானங்கள் நிறைவேற்றவில்லை. எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து 4 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
ஜூலை 11 பொதுக்குழு கூட்டப்பட்ட போது ஓ.பி.எஸ்., ஒருங்கிணைப்பாளர் பதவியில் நீடித்தார் என்பதால், அவரது ஒப்புதல் இல்லாமல் கூட்டப்பட்ட பொதுக்குழு சட்டவிரோதமானது என வைத்திலிங்கம் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்தியா vs பாகிஸ்தான் போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம்…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…