பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தடைந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து இறுதிக்கட்ட பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்பொழுது பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவி வருகிறது.
இதனால் இந்தியா உட்பட 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. ஆயினும் இந்த புதிய கொரோனா வைரஸ், உலக நாடுகளில் பரவிவருகிறது. இந்நிலையில், பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தடைந்த 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரன் தெரிவித்தார்.
அதில் சென்னையில் 5 பேருக்கும், தஞ்சாவூரில் 3 பேருக்கும், நீலகிரியில் 2 பேருக்கும், மதுரை, செங்கல்பட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது, உருமாறிய புதிய வகையான கொரோனாவா என கண்டரிய மாதிரிகள், புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இவர்களின் தொடர்பில் இருந்த 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். அதுமட்டுமின்றி, பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க 120 தனிபடுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்,
டெல்லி : இந்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு 2025 ஜூலை 1 (இன்று) முதல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…