கடந்த 8 ஆண்டுகளில் 12,835 மருத்துவர்களும், 9,535 செவிலியர்களும் நியமனம்-அமைச்சர் விஜயபாஸ்கர்

இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது. சுகாதாரத்துறையில் தமிழகம் பின்னடைவுக்கு சென்றுள்ளது என்று  திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை தெரிவித்தார்.இதற்கு

இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது. சுகாதாரத்துறையில் தமிழகம் பின்னடைவுக்கு சென்றுள்ளது என்று  திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை தெரிவித்தார்.இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கடந்த 8 ஆண்டுகளில் 12,835 மருத்துவர்களும், 9,535 செவிலியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் .

நிதி ஆயோக், தவறான புள்ளி விவரங்களின் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து, நாங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார்.