அதிர்ச்சி: மின்கம்பி மீது உரசிய பேருந்து.. 5 பேர் உயிரிழந்த சோகம்!

கல்லணையில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்ற தனியார் பேருந்து, வரகூர் கிராமத்திற்கு வந்தபோது சாலையின் ஓரம் இருந்த மின்கம்பி மீது உரசி விபத்துக்குளானது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து, திருவையாறு அருகே உள்ள வரகூர் கிராமத்திற்கு வந்தபோது சாலையோரமாக இருந்த மணலில் அமுங்கி, அதற்கு அருகில் இருந்த மின்கம்பி மீது மோதியது. இதனால் பேருந்தில் படியில் இருந்து பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நடுக்காவேரி போலீசார், வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 10 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025