இரவு நேர பேருந்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு பகல் நேர பேருந்துகளில் மாற்றி வழங்கப்படாது என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என நேற்று தமிழக அரசு அறிவித்தது.
இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதியில்லை. வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு பேருந்துகளில் ஞாயிறு மற்றும் இரவு நேர பயணங்களுக்கான முன்பதிவு கட்டணம் திருப்பி செலுத்தப்படும் எனவும் இரவு நேர பேருந்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு பகல் நேர பேருந்துகளில் மாற்றி வழங்கப்படாது என போக்குவரத்துத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…
லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…