குதர்க்க பேச்சுகளின் மூலம் மலிவான விளம்பரத்தை தேட முயல்கிறார் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அண்ணாமலையின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே கிடையாது எனவும், அதனால் தான் காங்கிரஸ் கட்சியை திமுக உடன் இணைத்து விடலாம் எனவும் விமர்சித்திருந்தார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி இந்த விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதாவது, கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் படுதோல்வி அடைந்த பாஜக, 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 23 இடங்களில் போட்டியிட்டும், நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தலில் தோல்வியடைந்த பாஜக தலைவர்கள் தோல்வியை மறந்து பேசலாமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் மக்களவையில் 9 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களிலும், சட்டமன்ற தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தமிழகத்தில் பெரும் சாதனை படைத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ் இல்லை என குதர்க்கமான பேச்சுகள் மூலம் மலிவான விளம்பரம் தேட அண்ணாமலை முயல்கிறார் எனவும், இது வேண்டாம் விபரீதம் எனவும், கே எஸ் அழகிரி அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…