உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published by
Venu
  • 9 புதிய மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
  • உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில்  உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆனால் மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சிகளுக்கு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தொகுதி மறுவரையரை பணிகளை முடிக்காமல் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில்  திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.மேலும் தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.அப்பொழுது நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை  ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.மேலும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில், 4 மாதங்களில் மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் மறுவரையறை செய்த பின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு திரும்ப பெறுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

 

Published by
Venu

Recent Posts

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

23 minutes ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

48 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

3 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

3 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

4 hours ago