முதன்முதலில் அழகு தமிழில் விமானத்தில் அறிவிப்பு வெளியிட்ட கேப்டன்! நெட்டிசன்கள் பாராட்டு!

முதன்முதலில் அழகு தமிழில் அறிவிப்பு வெளியிட்ட கேப்டன்.
இந்தியாவில் தற்போது விமானங்களில் அறிவிப்புகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தான் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் பறக்கும் விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்யவேண்டும் என்று கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்துவருகிற நிலையில், வடசென்னையைச் சேர்ந்த பிரிய விக்னேஷ் என்பவர், இண்டிகோ விமானத்தில் கேப்டனாக இருக்கிறார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து மதுரை சென்ற விமானத்தில், தமிழில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிற நிலையில், அந்த வீடியோவில் பேசும் அவர், ‘திருச்சி நகரத்தில் 16,000 அடி உயரத்தில் நாம் பறந்துகொண்டிருக்கிறோம்.
இன்னும் பத்து நிமிடத்தில் காவேரி ஆறு, காவேரி, கொள்ளிடம் என பிரியும் இடத்தைக் காண முடியும். இந்த இரண்டு ஆறுகளும் பிரியும் இடத்திலுள்ள இடத்துக்கு ஸ்ரீரங்கம் என்று பெயர். நீங்கள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலைக் காண காணலாம்’ என்று அழகுத் தமிழில் பேசியுள்ளார். இவரது இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.