மு.க.ஸ்டாலின், ஆ.ராசா மீது ஒப்புதல் பெற்றவுடன் வழக்கு தொடருவேன் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2ஜி ஊழல் மிகப்பெரிய ஊழல் என்று முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.மேலும் அவர் பேசுகையில், தமிழ்நாட்டின் பட்ஜெட் அளவுக்கு ஊழல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.76 லட்சம் கோடி கொள்ளையடித்த கட்சி திமுக கட்சி கூறினார்.
முதலமைச்சர் பழனிசாமி பேச்சிற்கு பதில் அளிக்கும் வகையில் ,திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா , பழனிசாமிக்கு துணிவிருந்தால் இந்தியாவின் அத்தனை ஊடகங்கள் முன்பாக அதிமுக ஊழல் கட்சியா – திமுக ஊழல் கட்சியா என்று கோட்டையில் என்னுடன் விவாதிக்க வேண்டும் என்று சவால் விடுத்தார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா கேட்டதற்கு முதல்வர் பழனிசாமியை முதலில் பதில் தெரிவிக்க சொல்லுங்கள் என்று கூறிருந்தார்.இதற்கு அதிமுகவினரும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறுகையில், மு.க.ஸ்டாலின் ,ராசா ஆகியோரை முதலமைச்சர் பழனிசாமி ,ஜெயலலிதா உள்ளிட்டோரை அசிங்கமாகவும்,அவமானமாகவும் பேசிய அவர்களை கைது செய்ய வேண்டி அதிமுக தலைமையிடம் ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.ஒப்புதல் பெற்றவுடன் அவர்கள் மீது வழக்கு தொடருவேன் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…