எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு புதிய கலந்தாய்வு பட்டியல் வெளியிடக்கோரி வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை!
தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் வெளி மாநில மாணவர்களை சேர்ப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் மொத்த காலி இடங்கள் 3,958 ஆகும். தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவக்கல்லூரிகளில் நீட் தேர்வின் மதிப்பெண் நேரடி கலந்தாய்வு மூலம் இந்த இடங்கள் நிரப்பப்படும். 2019 – 2010 கல்வி ஆண்டிற்கான மருத்துவக்கல்லூரி இடங்கள் தற்போது நிரப்பப்பட்டு வருகின்றன. கலந்தாய்வுக்கான மாணவர்கள் பட்டியல் கடந்த வாரம் வெளியானது. இதில், தமிழகம் அல்லாது அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா உட்பட வட மாநில மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தது. அப்போது, இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் பதில் அளிக்க கோரி விசாரணையை ஜூலை 22 ம் தேதி உத்தரவிட்டார். மேலும், ஏற்கனவே வெளியிட்ட கலந்தாய்வு பட்டியலை நீக்கி புதிய கலந்தாய்வு பட்டியலை வெளியிடவும் உத்தரவிட்டுள்ளது.