சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மூலம் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு பணமோசடி நடந்ததாகவும், இதில் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது. இந்த வழக்கில் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எஸ். விசாகன் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை, டாஸ்மாக் பணமோசடி வழக்கு தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரனின் சென்னை அல்வார்பேட்டையில் […]
சென்னை : ஆள்கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விவகாரத்தில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து விசாரிக்க உத்தரவிட்டது. திருவள்ளூரில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரரை கடத்தப்பட்ட வழக்கு விசாரணையில், ஏடிஜிபி ஜெயராமின் அதிகாரப்பூர்வ கார் கடத்தப்பட்ட சிறுவனை விடுவிக்க பயன்படுத்தப்பட்டதாகவும், அது காவலரால் ஓட்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமின் மனு மீதான விசாரணைக்கு ஏடிஜிபி […]
சென்னை : திருவள்ளூரில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரரை கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாகி இருந்த புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியும், ஆள் கடத்தலுக்கு உதவியதாக கூறப்படும் ஏடிஜிபி ஜெயராமனும் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஒருவேளை இந்த வழக்கில் ADGP ஜெயராம் ஆஜராகவில்லை என்றால் கைது செய்து ஆஜர்படுத்த காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. பின்னர், முதல் ஆளாக உயர்நீதிமன்றத்தில் ஏடிஜிபி ஜெயராமன் ஆஜராகினார். ஆனால், […]
சென்னை : நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து செய்தி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் ஒருவரையொருவர் சுட்டிக்காட்டி கடந்த சில நாட்களாக அறிக்கைகளை வெளியிட்டனர். ஒருவருக்கொருவர் மீதான விமர்சனங்கள் அடுத்தடுத்த விவாதங்களாக மாறியது. ஏற்கனவே, அவர்களின் விவாகரத்து பிரச்சினை நீதிமன்றத்தின் நிலவையில் உள்ளது. இந்த நிலையில், ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி ஆகியோர் தங்கள் விவாகரத்து வழக்கு குறித்து எந்த பொது அறிக்கைகளையோ அல்லது பத்திரிகை வெளியீடுகளையோ வெளியிட […]
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோருக்கு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2024 செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற்ற 68-வது பொதுக்குழுக் கூட்டத்தில், கட்டிடப் பணிகளுக்குத் தேவையான நிதி காரணமாகவும், தேர்தல் நடத்துவதால் ஏற்படும் செலவுகள் மற்றும் பணிகளுக்குப் பாதிப்பு ஆகியவற்றைக் […]
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, சாதி சான்றிதழ்களில் உள்ள பெயர் முரண்பாடுகளால் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்ப்பதற்கும், சமூகநீதி மற்றும் ஆவணங்களின் ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் நோக்கில் வழங்கப்பட்டது. சாதி சான்றிதழ்கள் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் அரசு நலத்திட்டங்களில் இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகளைப் பெறுவதற்கு அவசியமான ஆவணமாகும். இந்த சான்றிதழ்கள் […]
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தியது. டாஸ்மாக் என்பது தமிழ்நாட்டில் மதுபான விற்பனையை கட்டுப்படுத்தும் அரசு நிறுவனம். இந்த சோதனையில், அமலாக்கத்துறை ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தது. அவர்கள் இதை நிதி முறைகேடு மற்றும் ஊழல் சம்பந்தமாக செய்ததாக கூறினர். ஆனால், இந்த சோதனை தமிழ்நாடு அரசுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சோதனைக்கு பிறகு, தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் […]
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது, இந்தச் சோதனையில், டெண்டர் செயல்முறைகள், மதுபான விலை நிர்ணயம், பார் உரிமங்கள், மற்றும் நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. மேலும், ரூ.1,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களை கைப்பற்றியதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தமிழக அரசியலில் புயலை கிளப்பிய […]
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தச் சோதனைகள் மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற்றது. அமலாக்கத்துறையின் அறிக்கையின்படி, இந்த சோதனையின் போது, டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டது. இது தமிழக அரசியலில் புயலை கிளப்பிய நிலையில் எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து டாஸ்மாக் […]
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி, கொடைக்கானலுக்கு ஏராளமான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கு பசுமை நிறைந்து காணப்படுவதால் வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டை தடுக்கும் நோக்கத்தில் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஊட்டிக்கு வார நாட்களில் 6,000 சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8,000 சுற்றுலா வாகனங்களை மட்டும் இயக்க வேண்டும். அதேபோல், கொடைக்கானலுக்கு வார […]
சென்னை : நடிகை நயன்தாராவின் ‘Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் அனுமதியின்றி ‘நானும் ரவுடிதான்’ காட்சிகளை பயன்படுத்தியற்கு ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்திருந்தது. முன்னதாக, நெட்பிளிக்ஸ் தரப்பில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என அறிவுறுத்தி மனு மீதான விசாரணை கடந்த ஜன.22ம் தேதி அன்று நடைபெற்றது. அப்பொழுது, இரு தரப்பு […]
சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி நெட்பிலிக்ஸ் தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நடிகை நயன்தாராவின் ‘Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி ரூ.10 கோடி இழப்பீடு கோரி தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. முன்னதாக, நெட்பிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க […]
சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்பதை தடுக்கும் வகையில், வரும் மார்ச் மாதம் முதல் கியூஆர் கோடு முறையில் விற்பனை நடைமுறைக்கு வருகிறது. அதாவது, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால், கடையின் அனைத்து ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என கடந்த 2024 ம் ஆண்டு அக்டோபர் மாதம் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் […]
சென்னை: நடிகை நயன்தாராவின் ‘Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி ரூ.10 கோடி இழப்பீடு கோரி தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. முன்னதாக, இந்த வழக்கில் இடைக்கால தடை கோரும் மனு மீதான விசாரணையை இன்று (ஜன.8ம் தேதி) ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நெட்பிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என […]
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல் ரசிகர்கள் காத்திருக்கும் சூழலில், படத்தை வெளியிட விதிக்கபட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பு பிரச்னை உள்ளிட்ட பல காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போய் கொண்டே செல்கிறது. அதாவது, ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம், ‘பிசாசு 2’ படத்தை தயாரிப்பதற்கு முன்பு, ‘இரண்டாம் குத்து’ படத்தின் விநியோக உரிமையை பெற்றிருந்தது. அப்பொழுது, பிளையிங் ஹார்ஸ் […]
சென்னை : தன்னைப்பற்றி சிங்கமுத்து அவதூறு பரப்புவதாக சிங்கமுத்து பேசுவதாக கூறி அவர் மீது சென்னை உயர்நிதி மன்றத்தில் வடிவேலு ரூ.5 கோடி கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், இனிமேல் இது போன்று வடிவேலு பற்றி பேசக்கூடாது என சென்னைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவதூறு பேச்சு ஆரம்பக் காலத்தில் நடிகர் வடிவேலு மற்றும் நடிகர் சிங்கமுத்து இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. […]
சென்னை : இப்போதெல்லாம் ஒரு புது படம் வெளியாகிறது என்றால் அந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்பவர்கள் படம் முடிந்த பிறகு விமர்சனம் கூறும் போது படம் பிடிக்கவில்லை என்றால் கடுமையாக விமர்சனம் செய்வது அந்த படத்தின் பாதிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடந்த நவம்பர் 20 அன்று அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிமை உள்ளது. […]
சென்னை : இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என ஒரு ஆண்டுகளுக்கு மேல் ரசிகர்கள் காத்திருக்கும் சூழலில், சென்னை உயர்நீதி மன்றம் பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட தற்காலிமாக தடை விதித்துள்ளதாக உத்தரவிட்டுள்ளது. பிசாசு 2 படம் வெளியாகாமல் இருப்பதற்கு முக்கியமான காரணமே, படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் வைத்துள்ள கடன் பிரச்சினை தான். ஏனென்றால், ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் பிசாசு 2 படத்தை தயாரிப்பதற்கு முன்பு […]
சென்னை : சென்னை ஆற்காடு சாலையில், தனக்கு உரிய ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை, 20 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தி நடிகர் கவுண்டமணி மீட்டுள்ளார். 1996-ல் நளினி பாய் என்பவரிடம் இருந்து கோடம்பாக்கத்தில் ஆற்காடு சாலையில் ஐந்து மைதானங்கள் மற்றும் 454 சதுர அடி நிலம் வாங்கப்பட்டு, 3.58 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. திடீரென வணிக வளாகம் கட்ட ஒப்பந்தம் செய்த தனியார் நிறுவனம், காலக்கெடு முடிவதற்குள் அதிக பணத்தை […]
சென்னை : நடிகர் வடிவேலு மற்றும் நடிகர் சிங்கமுத்து இருவரும் ஆரம்பக் காலத்தில் ஒன்றாக இணைந்தது படங்களில் நடித்திருந்தாலும், இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இணைந்து படங்களில் நடிப்பதையே நிறுத்திவிட்டார்கள். இருப்பினும், வடிவேலு குறித்து நடிகர் சிங்கமுத்து பேட்டிகளில் கலந்துகொள்ளும்போது அவதூற்றைப் பரப்பும் வகையில் பேசிக்கொண்டு இருந்தார். குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது வடிவேலு ஒரு படத்தில் தன்னுடன் நடித்து யாராவது பிரபலமான நடிகர் ஆகிவிட்டார்கள் என்றால் […]