”இனி அறிக்கை விடக்கூடாது” – ரவி மோகன், ஆர்த்திக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

விவாகரத்து குறித்து வலைதளங்களில் இனி எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது என நடிகர் ரவி மோகன், ஆர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Ravi mohan - Aarti

சென்னை : நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து செய்தி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் ஒருவரையொருவர் சுட்டிக்காட்டி கடந்த சில நாட்களாக அறிக்கைகளை வெளியிட்டனர். ஒருவருக்கொருவர் மீதான விமர்சனங்கள் அடுத்தடுத்த விவாதங்களாக மாறியது. ஏற்கனவே, அவர்களின் விவாகரத்து பிரச்சினை நீதிமன்றத்தின் நிலவையில்  உள்ளது.

இந்த நிலையில், ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி ஆகியோர் தங்கள் விவாகரத்து வழக்கு குறித்து எந்த பொது அறிக்கைகளையோ அல்லது பத்திரிகை வெளியீடுகளையோ வெளியிட வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

இன்றைய தினம் தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க மனைவி ஆர்த்திக்கு தடை விதிக்க கோரி நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்துள்ள வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இரு தரப்பினரும் அவதூறு கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், சமூக வலைதளங்களில் நடிகர் ரவி மோகன், ஆர்த்தி தம்பதியர் குறித்த செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 12 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்