மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ..! ‘பாக்’ வார்த்தையை நீக்கிய கடை.!
'பாக்' என்ற வார்த்தையே தங்களுக்கு அசௌகரியத்தை தருவதாக வாடிக்கையாளர்கள் கூறியதால் பெயரை இவ்வாறு மாற்றியுள்ளதாக த்யோஹார் ஸ்வீட்ஸின் உரிமையாளர் அஞ்சலி ஜெயின் கூறியுள்ளார்.

ஜெய்ப்பூர் : ஆபரேஷன் சிந்தூர்க்கு ஆதரவு அளிக்கும் விதமாக, ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பகம் ஒன்று மைசூர் பாக், இனிப்புகளின் பெயர்களை மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள வைஷாலி நகர் பகுதியில் உள்ள பிரபலமான இனிப்புக் கடையான தியோஹர் ஸ்வீட்ஸ், முன்பு “பாக்” என்ற பெயரை கொண்டிருந்த அதன் இனிப்புகளின் பெயரை மாற்றியுள்ளது. உதாரணமாக, மைசூர் பாக் இப்போது இந்த கடையில் மைசூர் ஸ்ரீ என்று அழைக்கப்படும்.
மேலும், மோதி பாக், ஆம் பாக் மற்றும் கோண்ட் பாக் போன்ற பிற இனிப்புகள் முறையே மோதி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ மற்றும் கோண்ட் ஸ்ரீ என மறுபெயரிடப்பட்டுள்ளன. ஸ்வர்ன் பாஸ்ம் பாக் மற்றும் சண்டி பாஸ்ம் பாக் உள்ளிட்ட கடையின் பிரீமியம் இனிப்புகளும் ஸ்வர்ன் பாஸ்ம் ஸ்ரீ மற்றும் சண்டி பாஸ்ம் ஸ்ரீ என மறுபெயரிடப்பட்டுள்ளன.
பாகிஸ்தானை சுருக்கமாக ‘பாக்’ என அழைக்கும் வழக்கம் இருப்பதால், அது வாடிக்கையாளர்களுக்கு அசவுகரியத்தை தருவதாகக் கூறி இந்த பெயர் மாற்றத்தை செய்துள்ளதாக அந்த இனிப்பகம் விளக்கமளித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22 அன்று 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து அதிகரித்த இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!
May 23, 2025
அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!
May 23, 2025