சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு இருப்பதாக ஐஐடி-யில் இருந்து வெளியேறுவதாக நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பிய உதவி பேராசிரியர்.
சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு இருப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அந்தவகையில், 2019-ஆம் ஆண்டு மாணவி பாத்திமா தற்கொலை செய்த போது ஐஐடியில் சாதி பாகுபாடு இருப்பதாக மாணவர்கள் புகார் அளித்திருந்தனர்.
இந்த நிலையில் மானுடவியல் மற்றும் சமூகவியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த விபின் என்பவர் தான் வேலை பார்க்கக்கூடிய துறையில் சாதி பாகுபாடு இருப்பதாகவும், இதை பலமுறை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றபோதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக, தான் பணியில் இருந்து வெளியேறுவதாகவும், வேறு நிறுவனத்திற்கு செல்கிறேன் என்று மின்னஞ்சல் மூலமாக ஐஐடி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது ஐஐடி நிர்வாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அந்த கடிதத்தில் மற்றொரு தகவலையும் தெரிவித்துள்ளார். இந்த ஐஐடியில் நிகழக்கூடிய சாதி ரீதியான பாகுபாடு குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிநல ஆணைய உறுப்பினர்களை உள்ளடக்கிய விரிவான ஒரு அமைப்பை ஏற்படுத்தி முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். ஆனால் உதவி பேராசிரியரின் கடிதம் தொடர்பாக, ஐஐடி நிர்வாகம் இதுவரை எந்த அதிகாரபூர்வ விளக்கத்தையும் அளிக்கவில்லை.
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…
லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…