தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்.!

Published by
பால முருகன்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

27 – ஆம் தேதி தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தென்காசி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

28 – ஆம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

29,30 ஆகிய தேதிகளில் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
அதிகபட்ச வெப்பநிலை 33 மட்டும் குறைந்த வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை  ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

26, 27 ஆகிய தேதிகளில்  குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

26, 27 ஆகிய தேதிகளில் கேரளா, லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குலாப் புயல்:

“குலாப்” புயல் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி கோபால்பூருக்கு கிழக்கு தென் கிழக்கே 180 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் மேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஓடிசா கடலோர பகுதிகளில் கலிங்கபட்டினம் கோபால்பூருக்கு இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

rain

Recent Posts

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

1 minute ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

35 minutes ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

1 hour ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

3 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

4 hours ago