தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.!

Published by
பால முருகன்

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய நீலகிரி, கோவை , திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

8- ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

9,10 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம்.

வரும் 7-ஆம் தேதி வரை கேரள மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் குறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

10-ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் இதனால் மீன்பிடிக்க மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

3 hours ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

3 hours ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

4 hours ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

5 hours ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

5 hours ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

5 hours ago