[File Image]
தருமபுரி, புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன் மீது நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தருமபுரி, புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அதன்படி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிமுகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வருமானத்துக்கு அதிமாக சொத்து சேர்த்த வழக்கில் 2021-ல் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது. இதுபோன்று சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் மீதும் 10,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கே.பி.அன்பழகன், மனைவி மல்லிகா, மகன் சசிமோகன், சந்திர மோகன் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.பி.அன்பழகன் ரூ.45.20 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக கேபி அன்பழகன் சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் இருவரும் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திற்கிற் தாக்கல் செய்துள்ளது.
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…