சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்படும் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து,சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர்,இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து,சிவசங்கர் பாபா உடல்நலக்குறைவு காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவர,அவர் வெளிநாடுகளுக்கு தப்பிசெல்லாமல் இருக்க,அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிசிஐடி போலீசார் ‘லுக் அவுட் நோட்டீஸ்’ அனுப்பினர்.மேலும்,தமிழ்நாடு சிபிசிஐடி தனிப்படை போலீசார் விசாரணைக்காக உத்தரகண்ட் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து,டேராடூன் மருத்துவமனையில் இருந்த சிவசங்கர் பாபா,சிபிசிஐடி போலீசார் வருவதை அறிந்து மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார்.பின்னர்,சிவசங்கர் பாபா நேற்று காலை டெல்லி காசியாபாத்தில் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா மொட்டை அடித்து அடையாளத்தை மாற்றியிருந்தார்.
இதனையடுத்து,அவரை டெல்லி சாகேத் நீதிமன்றத்தல் ஆஜர்படுத்தி தமிழக்திற்கு அழைத்துச் செல்ல சிபிசிஐடி போலீசார் தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது.இதனால்,சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்து செல்ல டெல்லி சாகேத் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதன்காரணமாக,சிவசங்கர் பாபாவை இரவோடு இரவாக,விமானம் மூலம் சிபிசிஐடி போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர்.இதனைத்தொடர்ந்து, சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில்,சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல்,மாமல்லபுரம் காவல்நிலையத்தில் சிவசங்கர் பாபா மீது மேலும் இரண்டு போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளது.ஆனால்,தற்போது போக்சோ நீதிமன்றமானது விடுமுறையில் உள்ளதால்,நீதிமன்றம் தொடங்கிய பின்னர்,சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீசார் கடுமையான விசாரணையை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…