சென்னையிலுள்ள அமோனியம் நைட்ரேட் போன்ற பாதிப்பு விளைவிக்கக் கூடிய வேதி பொருட்களை மூன்று நாட்களுக்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.
நேற்றுமுன்தினம் லெபனானில் உள்ள பெய்ரூட்டில் 2,750 டன்க்கும் மேற்பட்ட அமோனியம் நைட்ரேட் ஒரு துறைமுகத்துக்கு அருகில் உள்ள கிடங்கில் வைக்கப்பட்டிருந்ததால் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சென்னையிலும் அதேபோன்று அமோனியம் நைட்ரேட் 270 டன் 37 கண்டெய்னர்களில் உள்ளது என தகவல் வெளியாகியது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமோனியம் நைட்ரேட் உள்ள சுங்கத் துறைக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்னும் மூன்று நாட்களில் அங்கு உள்ள அமோனியம் நைட்ரேட் முழுவதும் இடமாற்றம் செய்யப்பட வேண்டுமெனவும், ஏல விற்பனையில் விடப்பட வேண்டும் எனவும், உரங்கள் ஆகியவை தயாரிப்பதற்கு கொடுக்கலாம் எனவும் கூறியுள்ளது. அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டு இருக்கும் இடத்தின் உரிமையாளர் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் இருக்கும் கண்டெய்னர்களின் இருப்பிடத்தை குறித்து அவை இடமாற்றம் செய்யப்படும் வரை பாதுகாப்பிற்காக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…