இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது தற்போது தமிழகத்தில் உள்ள ஊரடங்கு மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து எடுத்துரைக்கவுள்ளார். முதல்வருடன் தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்வரின் தனி செயலாளர் உதயச்சந்திரன்,சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகல் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மாதம் 13-ஆம் தேதி முதல்வர் ஆளுநரை சந்தித்த போது கொரோனா நிவாரணமாக ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்தார். கொரோனாவிற்கு தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்தநிலையில், இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். வரும் சனிக்கிழமையன்று முதல்வர் மேட்டூர் செல்கிறார். பின்னர், திருவாரூர் மாவட்டத்திற்கு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…