ஹூட் செயலியில் இணைந்த முதல்வர் அவர்களை சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் வரவேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய ஹூட் என்ற செயலி 60 வினாடி அளவு ஆடியோவை பதிவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் எவர் வேண்டுமானாலும் குரல் பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்ததாகவும் சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அவர்கள் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பின் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான குரல் பதிவுடன் இந்த செயலியை அறிமுகம் செய்து வைத்தார். பின் சென்னையில் ஆழ்வார்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சௌந்தர்யா ரஜினிகாந்த் நேரில் சந்தித்து தனது செயலி குறித்து முதலமைச்சருக்கு விவரித்து வாழ்த்து பெற்றார்.
இந்த நிலையில், இந்த செயலியில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இணைந்துள்ளார். முதல்வர் அவர்களை சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் வரவேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார் அவர்களை ஹுட் சமூக ஊடகத்திற்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இன்று முதல் @cmotamilnadu என்கிற அதிகாரப்பூர்வமான ஹூட் ஹேண்டிலை அனைவரும் பின்தொடரலாம்.’ என பதிவிட்டுள்ளார்.
லண்டன் : ஜூலை 10 முதல் 14 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட்…
டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, கடந்த 2017-ஆம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மஹ்தியை கொலை…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது…
டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, கடந்த 2017-ஆம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மஹ்தியை…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2025 செப்டம்பர் 28 அன்று குரூப் 2 மற்றும் 2A…