2 நாள் அரசு முறை பயணமாக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், டெல்லியில் இருந்து சென்னை திரும்பியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 2 நாள் அரசுமுறை பயணமாக, சென்னையில் இருந்து நேற்று காலை தனி விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். இதனையடுத்து,நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த அவர், தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் வழங்கி உள்ளார்.
இந்நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்களும் உடன் இருந்தார். சாணக்கியாபுரியில் உள்ள பழைய தமிழ்நாடு இல்லத்தை முதல்வர் ஆய்வு செய்தார். முன்னதாக இங்கு புதிய இல்லம் கட்டுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. அதை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
இந்நிலையில், 2 நாள் அரசு முறை பயணமாக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது அரசுமுறை பயணத்தை நிறைவு செய்து, டெல்லியில் இருந்து சென்னை திரும்பியுள்ளார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…