டெல்லியில் நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ் விஜயன் நேற்று நியமனம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, இன்று முதலமைச்சரை சந்தித்து ஏ.கே.எஸ் விஜயன் வாழ்த்துப் பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை மறுநாள் காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். காலை 10:30 மணி அளவில் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கரும்பூஞ்சை மருந்து, கொரோனா தடுப்பூசி, நீட் தேர்வு , தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பிரதமர் மோடியிடம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின், முதல் முறையாக பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார்.டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 18-ஆம் தேதி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…