முன்னாள் தமிழ் சங்க தலைவர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

முன்னாள் பெங்களூரு தமிழ்ச்சங்கத் தலைவரும் தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவருமான மு.மீனாட்சி சுந்தரம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ‘முன்னாள் பெங்களூரு தமிழ்ச்சங்கத் தலைவரும் தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவருமான மு.மீனாட்சி சுந்தரம் அவர்களது மறைவு வேதனையளிக்கிறது.
அல்சூர் ஏரிக்கரையில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கடந்த 2009-ஆம் திறந்த வைத்தபோது பெங்களூர் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்தவர் அவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தமிழர் ஆர்வலர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி”#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin @mp_saminathan pic.twitter.com/O8vGxEYugO— TN DIPR (@TNDIPRNEWS) March 9, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025