அனைத்து துறை சார்ந்த செயலாளர்களுடன் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 13-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 23-ம் தேதி முதல் ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இதில், அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். 23 நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை சார்ந்த செயலாளர்களுடன் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
அனைத்துத்துறை சார்ந்த செயலாளர்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…