முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயார் மருத்துவமனையில் அனுமதி..!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயாருமான தயாளு அம்மாள் உடல் நலக்குறை காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூப்பின் காரணமாக அவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதாகவும் , வழக்கமான உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கு முன் கடந்த 2018 ஆம் ஆண்டு தயாளு அம்மாவிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.