#BREAKING: மீனவ குடும்பங்களுக்கு ரூ.5,000 வழங்க முதலமைச்சர் உத்தரவு..!

Default Image

மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் கடல் மீன் வளத்தை பேணிக்காத்திட தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையிலும், மேற்குக் கடற்கரைப் பகுதியில் ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து ஜூலை 31 ஆம் தேதி வரையிலும் 61 நாட்களுக்கு மீன் பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த காலகட்டத்தில் வங்கக் கடலில் மீன்பிடிக்க தடை காலம் உள்ளது. இந்த இரண்டு மாத காலத்திற்கான நிவாரணத் தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரண மூலமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒரு லட்சத்து 72 ஆயிரம் மீனவர்கள் பலன் பெறுவார்கள் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்