சட்டப் பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கவனமுடன் பதிலளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுரை.
தமிழக 16 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று காலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கி நடைபெற்றது.
பின்னர்,சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், ஜூன் 24-ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்,கட்சியின் தலைமைச் செயலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
திமுக தலைவரும்,தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர்,கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,சட்டப் பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு மூத்த உறுப்பினர்கள் கவனமுடன் பதிலளிக்க வேண்டும்.
மேலும்,பேரவையில் சிறப்பாக செயல்பட உறுப்பினர்கள் தொகுதி வாரியாகவும்,துறை வாரியாகவும் தரவுகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்லாமல்,அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பேரவையில் அதிகம் கேள்விகளை எழுப்ப வேண்டும்”,என்று அறிவுருத்தியுள்ளார்.
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…