கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 50 கார் ஆம்புலன்ஸ்களை கொடியசைத்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில்,சென்னையை விட கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படுகிறது.
இதன்காரணமாக,கொரோனா பரவல் அதிகமாக உள்ள கோவை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்படி,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் 6 மாவட்டங்களுக்கு இன்று,நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில்,திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்,கொரோனா நோயாளிகளுக்காக,திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 மருத்துவ படுக்கைகள் மற்றும் 20 கார் ஆம்புலன்ஸ் பயன்பாட்டை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து,தற்போது முதல்வர் ஸ்டாலின் கோவை ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.இந்நிலையில்,கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 50 கார் ஆம்புலன்ஸ் சேவையையும் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
இதனையடுத்து,முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்பு உடை அணிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெரும் கொரோனா நோயாளிகளை நேரில் பார்வையிட்டார்.மேலும்,கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிக்கிச்சை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து,கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆட்சியர்களுடன் இன்று மாலை ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…