தாடி வைக்காத, தாடி இல்லாத பெரியாராக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை புகழ்ந்து கூறியுள்ளார்.
பெரியாரின் பிறந்த நாள் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி கொண்டாட உள்ள நிலையில், இனிமேல் பெரியாரின் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் வெளியிடப்பட்ட அறிவிப்பில், சமூக நீதிப் பேரவைக்கு பெரியார் அளித்த அடித்தளமே காரணம் எனவும், பெரியார் யாரும் எழுத தயங்கியதை எழுதியவர், யாரும் பேச தயங்கியதை பேசியவர். தமிழருக்கு எதிரான அனைத்தையும் எதிரியாக கொண்டு செயல்பட்டவர் பெரியார் எனவே, இனி பெரியாரின் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ செல்வபெருந்தகை அவர்கள் பேசும் பொழுது, பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாளாக கொண்டாட அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். மேலும் நமக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்த பெரியார் தற்போது இல்லாவிட்டாலும் தாடி வைக்காத, தாடி இல்லாத பெரியாராக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் என புகழாரம் சூட்டியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…