முதலமைச்சர் மாநில இளைஞர் விருது – இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டுகோள்.!

Published by
பாலா கலியமூர்த்தி

முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் த.மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் உள்ளடக்கியதாக இருக்கும். அதன்படி 2022-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. எனவே, இவ்விருதுகள் பெறுவது தொடர்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருதிற்க்கான விண்ணப்பம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் விண்ணப்பிக்க கடைசி நாள் மே 5ம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

2 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

3 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

4 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

4 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

6 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

7 hours ago