“நான் சொல்வதை எல்லாம் அப்படியே செய்கிறார் முதலமைச்சர் பழனிசாமி” – மு.க.ஸ்டாலின்

Published by
Venu

முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் சுயநலத்துக்காக ரத்து செய்துள்ளார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110-விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை அறிவித்தார்.அதாவது,  கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி  செய்யப்படுவதாக அறிவித்தார்.மேலும் கடன் தள்ளுபடி மூலம் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் அறிவிப்புக்கு பதில் அளிக்கும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், ஒரு அறிவிப்பை பழனிசாமி செய்திருக்கிறார். அதாவது கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார். கூட்டுறவுக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சொன்ன போது ரத்து செய்யாத பழனிசாமி – கூட்டுறவுக் கடனை ரத்து செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் சொன்னபோது ரத்து செய்யாத பழனிசாமி – ரத்து செய்ய மாட்டோம் என்று உச்சநீதிமன்றம் சென்று வாதிட்ட பழனிசாமி – இன்று ரத்து செய்ய என்ன காரணம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக ஆட்சி அமைந்ததும் ரத்து செய்வோம் என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். அதனால் வேறு வழியில்லாமல் ரத்து செய்துள்ளார் பழனிசாமி. விவசாயிகளுக்கு நன்மை செய்வதற்காக அவர் ரத்து செய்யவில்லை. தேர்தல் சுயநலத்துக்காக ரத்து செய்துள்ளார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.திமுக எதைச் சொல்கிறதோ, இந்த ஸ்டாலின் என்ன சொல்கிறானோ அதை பழனிசாமி அப்படியே செய்து கொண்டு வருகிறார்!
Published by
Venu

Recent Posts

அதிமுக – பா.ஜ.க. கூட்டணியால் முதல்வருக்கு காய்ச்சல்! நயினார் நாகேந்திரன் பதிலடி!

அதிமுக – பா.ஜ.க. கூட்டணியால் முதல்வருக்கு காய்ச்சல்! நயினார் நாகேந்திரன் பதிலடி!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…

48 minutes ago

ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…

1 hour ago

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் மாதிரி விஜய் அரசியல் செய்யணும்- ரோஜா அட்வைஸ்!

திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…

2 hours ago

INDvsENG : ‘வா வந்து பாரு’…ஆர்ச்சருக்கு அலர்ட் கொடுத்த ரிஷப் பண்ட்!

லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…

3 hours ago

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது! ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…

4 hours ago

பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸ் எடப்பாடி பழனிசாமி- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…

4 hours ago