முதல்வர், துணை முதல்வர் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திப்பார்கள் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமைச்சர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், சென்னை, ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். அதன்படி, அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் யார் என ஆக்டோபர் மாதம் 7 ஆம் தேதி அறிவிப்பதாக கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
இந்த செயற்குழு கூட்டம் நடந்த தினம் முதல் இருந்தே தமிழக அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒற்றுமையாக இருந்து வரும் தேர்தலை சந்திப்பார்கள் எனவும், அவர்கள் தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என தெரிவித்துள்ளார்.
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…
சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…
மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…